நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செட்டிநாயக்கன்பட்டி மந்தை குளத்தை ரூ.47.26 லட்சம் மதிப்பில் துார்வாரி அதை சுற்றி நடைமேடை,மின்விளக்கு,இருக்கை,பாதுகாப்பு வேலி,கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
ஊராட்சி தலைவர் லதா கூறியதாவது: மந்தை குளத்தில் குப்பை கொட்டப்பட்டு சீர்கேடாக இருந்தது.
இதை மாற்றி குளத்தை சுற்றி நடைமேடை அமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
விரைவில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.