தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிளாஸ்டிக் பாட்டில்களால் கழிவு நீர் தேக்கம்

பிளாஸ்டிக் பாட்டில்களால் கழிவு நீர் தேக்கம்

பிளாஸ்டிக் பாட்டில்களால் கழிவு நீர் தேக்கம்


ADDED : ஏப் 17, 2024 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2024 06:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கால்நடைகளால் விபத்து

*பண்ணைக்காடு பேரூராட்சி மெயின் ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது. பொதுமக்கள், வாகன ஒட்டுகள் புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. இனியாவது இதை கட்டுப்படுத்த வேண்டும். பாண்டியன், பண்ணைக்காடு.

குடிநீர் குழாய் உடைந்து கசிவு

தென்னம்பட்டி அய்யர்குளத்தில் குடிநீர் குழாய் உடைந்து நீர் கசிவு ரோட்டில் தேங்குவதால் ரோடு அரிமானமும், வாகனங்கள் நீரை கண்டு ஒதுங்கி செல்லும்போது விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். - கருப்பையா, வடமதுரை.

..............-------சேதமான ரோடால் பாதிப்பு

கோபால்பட்டி அருகே ராமராஜபுரம் தலையாரிப்பட்டி வழியாக செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகன விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. மணிகண்டன், தலையாரிபட்டி.

.............---------ரோடு நடுவே மின் கம்பம்

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி செல்லும் ரோடு நடுவில் உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது .இதன் ஸ்டே கம்பிகளை ரோட்டோரத்தில் கட்டி வைத்துள்ளதால் இரவு நேரங்களில் கம்பி தெரியாமல் மோதிக் கீழே விழுகின்றனர். குமரன், திண்டுக்கல்.

............---------அழிந்த பெயர் பலகை

திண்டுக்கல் ஆர்.எம்.கலானி 6வது குறுக்கு தெருவில் பெயர் பலகை அழிந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் ,மக்கள் பாதிக்கின்றனர் . தெரு பெயர் தெரியாமல் பலரும் சுற்றி செல்லும் நிலையும் தொடர்கிறது. பெயர் பலகையை புதுபிக்க வேண்டும். ஜெகதீஷ், திண்டுக்கல்.

...........---------குவிந்த பிளாஸ்டிக் குப்பை

திண்டுக்கல் அறிவுதிருக்கோயில் ரோட்டில் பிளாஸ்டிக் கலந்த குப்பை குவிந்து பல நாட்களாகவே அள்ளாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .துர்நாற்றமும் வீசுகிறது. குப்பை தொட்டி அமைத்து குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வசந்தா, திண்டுக்கல்.

..................----------சாக்கடையில் பிளாஸ்டிக் பாட்டில்

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பஸ் வெளியேறும் பகுதியில் உள்ள சாக்கடையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி ரோட்டில் செல்கிறது .சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் .சின்னச்சாமி, திண்டுக்கல்.

..................----------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us