ADDED : மார் 06, 2025 03:43 AM

பழநி: பழநி பச்சளநாயக்கன்பட்டி காலனியில் ரூ. 1.20 கோடியில் புதிய சமுதாயக்கூடம், ஆயக்குடி பேரூராட்சியில் பாப்பன் வாய்க்காலில் நேரடி பாசன மதகுகள் மறு கட்டுமானம் செய்யும் பணி, பெரிய வாய்க்கால் சீர் செய்யும் ரூ. 5 கோடியில் பணி, பாலசமுத்திரம், பாலாறு- பொருந்தலாறு அணை வழிந்தோடி செங்குத்து கதவுகள் ஆகியவற்றிற்கு எம்.எல்.ஏ.,செந்தில்குமார் தலைமையில் பூமி பூஜை நடந்தது.
அடிவாரம், அருள்ஜோதி வீதியில் உள்ள பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம், நகராட்சி கடைவீதி பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம், 13 வது வார்டு பாரதி தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம், சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம், 17 வது வார்டு சமுதாய கூட வளாகத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா நடந்தது. தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் வேலுமணி, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், செபாஸ்டியன் பங்கேற்றனர்.