/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீதிமன்றத்தில் கணவரை தாக்கிய மனைவி கைது
/
நீதிமன்றத்தில் கணவரை தாக்கிய மனைவி கைது
ADDED : ஜூலை 25, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: பள்ளபட்டியை சேர்ந்த அந்தோணி பிரபு 38, அவரது மனைவி ஷோபனா 34, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு வாய்தாவிற்கு நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வந்திருந்தனர்.
அப்போது கணவர் அந்தோணி பிரபுவை சோபனா நீதிமன்றத்திற்குள் தாக்கினார். இதைப் பார்த்த மாஜிஸ்திரேட் நல்ல கண்ணன், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நீதிமன்ற பணி செய்ய இடையூறாக இருந்த சோபனாவை கைது செய்தார்.