/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
8 மாவட்டங்களில் காட்டு தீ வனத்துறையினர் திணறல்
/
8 மாவட்டங்களில் காட்டு தீ வனத்துறையினர் திணறல்
ADDED : மார் 22, 2024 01:38 AM
கொடைக்கானல்:தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான வனப்பகுதிகள் தீயில் கருகி வருகின்றன.
தீ விபத்து குறித்த தகவல் உடனுக்குடன் கிடைத்தாலும், மிக வேகமான பரவல் காரணமாக கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில், திண்டுக்கல், கன்னியாகுமரியில், தலா, 24; திருவண்ணாமலையில், 5; ஈரோடு, சேலத்தில் தலா, 2; நீலகிரி, தேனி, வேலுாரில் தலா 1 இடம் என, மொத்தம் 60 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது.
அந்தந்த மாவட்ட வன அலுவலர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

