/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோபத்தில் கொட்டகை மீது காரை மோத விட்ட பெண்
/
கோபத்தில் கொட்டகை மீது காரை மோத விட்ட பெண்
ADDED : பிப் 23, 2025 05:19 AM
வடமதுரை : அய்யலுார் கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் வசந்தா 40. இவருக்கும் அதே பகுதி சத்யா 32, இடையே நிலப்பிரச்னை உள்ளது.
பிரச்னைக்குரிய இடத்தில் சத்யா குடும்பத்தினர் தண்ணீர் குழாய் அமைத்ததை தமிழக முதல்வர் தனிப்பிரிவில் வசந்தா புகார் செய்தார்.
இதுதொடர்பாக பேரூராட்சி அதிகாரிகள் சத்யாவை விசாரித்ததால் ஆத்திரமடைந்த அவர் காரை இயக்கி வசந்தா தோட்டத்து கூரை கொட்டகையை இடித்து சேதப்படுத்தினார்.
இதில் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தினரும் தாக்கி கொண்டனர். வசந்தா காயமடைந்தார். சத்யா, அவரது கணவர் வேல்முருகன் 40, தந்தை கணேசன் 60, மற்றொரு தரப்பில் வசந்தா, கணவர் கிருஷ்ணன் 50, உள்ளிட்ட 10 பேரிடம் வடமதுரை எஸ்.ஐ., தாவூது உசேன் விசாரித்தார்.

