ADDED : ஆக 04, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு, ஆக. 5-
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பில் விராலிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சங்கத் தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். டாக்டர்கள் ஆர்த்தி, கேஷவர்த்தினி, சுகாதார ஆய்வாளர் இப்ராஹிம் ஆகியோர் தாய்ப்பாலின் அவசியம், தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினர். ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. திட்டத் தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.
