ADDED : ஜூன் 05, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை, ஜூன் 6-
அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோகுமார் தலைமையில் நடந்தது. மரக்கன்று நடும் நிகழ்ச்சி ,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலத்தை நிலக்கோட்டை எம்.எல்.ஏ., அய்யனார் துவக்கி வைத்தார். வைகை டிரஸ்ட் திட்ட இயக்குநர் அண்ணாதுரை பேசினார்.
ஏற்பாடுகளை வைகை டிரஸ்ட் டெல்லி விஸ்வ யுவ கேந்திரா பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
