ADDED : ஜூலை 31, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஆக.1 --
தண்ணீர்பந்தம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி, மதுரை காந்தி அருங்காட்சியகம் சார்பில் மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். மதுரை காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். யோகா பயிற்றுனர் பிரேமலதா அன்றாட வாழ்வியலுக்கு உதவும் யோகா ஆசனங்களை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார். அருங்காட்சியக பொருளாளர் செந்தில்குமார், ஆய்வு அதிகாரி தேவதாஸ், கல்வி அதிகாரி நடராஜன், வணிகவியல் துறை பேராசிரியர் தங்கமணி, ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
