/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாண்டிக்குடியில்10 பவுன் நகை கொள்ளை
/
தாண்டிக்குடியில்10 பவுன் நகை கொள்ளை
ADDED : ஆக 10, 2025 02:46 AM
தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் பீரோவை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையடித்த நபர்களை தாண்டிக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
தாண்டிக்குடியை சேர்ந்தவர் வாசுகி. இவரது மகள் சரண்யா பெங்களூருவில் உள்ள நிலையில் பேரக்குழந்தைகள் பராமரிப்புக்காக மகள் வீட்டிற்கு சென்றார். தொல்லியல் ஆராய்ச்சியாளரான சரண்யா , கணவர் குமரன் இருவரும் வேலை தொடர்பாக கீழ்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்து நேற்று முன்தினம் தாண்டிக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை கொள்ளையடித்தது தெரியவந்தது. சரண்யா புகாரில் டி.எஸ்.பி., முருகேசன் விசாரித்தார். மோப்ப நாய்,கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.