ADDED : ஏப் 19, 2026 05:56 PM
அ நிறம் | அளவு
பட்டிவீரன்பட்டி:சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி செம்பட்டி பசுமைக் குறள் தன்னார்வ அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி அய்யம்பாளையம் மருதாநதி அணை குடியிருப்பு பகுதியில் நடந்தது.
மஞ்சப்பையுடன் தேர்தல் சார்ந்த புள்ளி விவரங்கள், பொதுஅறிவு குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
தலைமையாசிரியர்கள் பாலமுருகன், வீ.பாலமுருகன், ஆசிரியர்கள் சவேரியார், முருகேசன், தன்னார்வலர் கிருஷ்ணபாண்டி, மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமு செய்திருந்தார்.
