தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 10ம் வகுப்பு தேர்வு; 23 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்

 10ம் வகுப்பு தேர்வு; 23 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்

 10ம் வகுப்பு தேர்வு; 23 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்


ADDED : மார் 11, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: மாவட்டத்தில் இன்று துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 114 தேர்வு மையங்களில் 23 ஆயிரத்து 538 மாணவர்கள் எழுதுகின்றனர்.

மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 349 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன.

இவற்றில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்து 86 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆயிரத்து 960 பேர், மெட்ரிக் பள்ளிகளில் 4 ஆயிரத்து 492 பேர் என 23 ஆயிரத்து 538 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களில் 11 ஆயிரத்து 252 மாணவர்கள், 12 ஆயிரத்து 286 மாணவிகள் அடங்குவர்.

இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 114 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

முதல் நாளான இன்று தமிழ் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாாதுகாப்பில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காப்பியடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் வகையில் முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமையில் கல்வி அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த படையினர் அனைத்து மையங்களிலும் அடிக்கடி சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us