sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 15 ஆண்டுகால மழைநீர் தேக்கம் அவதிக்கு விடிவு

/

 15 ஆண்டுகால மழைநீர் தேக்கம் அவதிக்கு விடிவு

 15 ஆண்டுகால மழைநீர் தேக்கம் அவதிக்கு விடிவு

 15 ஆண்டுகால மழைநீர் தேக்கம் அவதிக்கு விடிவு


ADDED : ஜன 09, 2026 06:12 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை தும்மலக்குண்டில் 15 ஆண்டுகளாக இருந்த மக்களின் அவதிக்கு தினமலர் செய்தி எதிரொலியாக தீர்வு ஏற் பட்டுள்ளது.

தும்மலக்குண்டில் பல்வேறு இடங்களில் பெய்யும் மழை நீர் பள்ளமான பகுதியாக இருக்கும் வடக்கு தெருவில் சேர்கிறது.

இங்குள்ள சிலர் தங்கள் நிலம் வழியே நீர் வெளியேறுவதை விரும்பாமல் கரை கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி வைத்தனர். இதனால் 15 ஆண்டுகளாக ஒவ்வொரு மழைக்கும் இங்குள்ள 3 வீதி பாதையிலும் மழை நீர் தேங்கி நிற்பதும், பல நாட்கள் சகதி காடாக மாறுவதும், சில வீடுகளுக்குள் நீர் புகுதல், குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் என அவதிப்பட்டனர்.

இங்கு பள்ளமான கடைசி பகுதியில் தேங்கும் மொத்த நீரும் தனிநபர்கள் இடம் வழியே மட்டுமே வெளியேற முடியும் என்ற நிலை இருந்ததால் பிரச்னைக்கு முடிவு ஏற்படாமல் இருந்தது.

இதுகுறித்து தினமலர் நாளிதழ் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன் பேச்சுவார்த்தை நடத்தி இருவரது இடங்களுக்கு நடுவில் 30 அடி நீளமுள்ள இரு குழாய்களை பதித்து நீர் வெளியேற வழி செய்தனர்.

பேரூராட்சி தலைவர் கூறுகையில்,'' இனி இப்பகுதியில் நீர் தேங்காது. குழாய் பாதை துவங்கும் இடத்தில் சதுர வடிவில் இரும்பு வலையுடன் கான்கிரீட் கட்டமைப்பு அமைக்கப்படும்.

மற்ற தாழ்வான பகுதிகளில் மண் நிரப்பி பேவர் பிளாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

15 ஆண்டுகளாக மிகவும் அவதி தந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட உதவிய தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us