/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரபல நிறுவன பெயரில் போலி பைகளில் அரிசி விற்பனை 16 டன் பறிமுதல்
/
பிரபல நிறுவன பெயரில் போலி பைகளில் அரிசி விற்பனை 16 டன் பறிமுதல்
பிரபல நிறுவன பெயரில் போலி பைகளில் அரிசி விற்பனை 16 டன் பறிமுதல்
பிரபல நிறுவன பெயரில் போலி பைகளில் அரிசி விற்பனை 16 டன் பறிமுதல்
ADDED : மே 02, 2025 02:14 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் அரிசி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக 26 கிலோ பைகள் தயாரித்து விற்பனை செய்ய வைத்திருந்த 16 டன் அரிசியை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் சிதம்பர சாமி 60. இவருக்கு சொந்தமான வள்ளுவர் பிராண்ட் என்ற அரிசி விற்பனை நிறுவனம் தமிழகம் முழுவதும் அரிசி விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் பெயரில் போலியாக 26 கிலோ பைகளை தயாரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் அரிசி விற்பனை செய்வதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஜெப்லா தலைமையில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் நிர்மலாமேரி, வைரசுந்தரம் உட்பட போலீசார் மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வடமதுரை அருகே தென்னம்பட்டியில் ஒரு கடையில் தலா 26 கிலோ எடையில் 545 அரிசி பைகள், முள்ளிப்பாடி ஆரோக்கியசாமி நகரில் ஒரு கடையில் தலா 26 கிலோ எடையில் 72 அரிசி பைகள் என மொத்தம் 617 பைகளில் 16 டன் அரிசியை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

