ADDED : மே 24, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் நேற்றுவரை 160 ரவுடிகள், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 49 பிடியாணை குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதிவு எண் இன்றி இயக்குதல், அதிவேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், மின்மினி விளக்குகள் பொருத்துதல், சட்ட விரோத மாற்றங்கள் செய்தல் ஆகிய விதி மீறல்களுக்கு எதிரான குற்றங்களில் 706 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 பேரின் ஜாமின்கள் ரத்து செய்யப் பட்டுள்ளது.
