/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழகத்தில் 17 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு

ADDED : டிச 27, 2024 05:33 AM

ஒட்டன்சத்திரம்: '' தமிழகத்தில் 17 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது''என,உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி,கல்லுாரிகளில் மாணவர்களுக்கு கட்டணம் இல்லா மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஒட்டன்சத்திரம் பழநியாண்டவர் மகளிர் கலை,அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சி,மண்டவாடி,அம்பிளிக்கை, ஓடைப்பட்டி, சின்னக்காம்பட்டி, எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.5.80 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை 17 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 44 மாதங்களில் 2500 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிதாக முழுநேரம்,பகுதிநேர ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டது.
2 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் 20.70 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர் என்றார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்திய புவனா, துணைத் தலைவர் தங்கம், ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், நகராட்சி தலைவர் திருமலைச்சாமி,ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், பாலு, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜா பங்கேற்றனர்.
பழநி : சின்ன கலையபுத்துாரில் பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, திண்டுக்கல் இணை கமிஷனர் கார்த்திக், துணை கமிஷனர் வெங்கடேஷ், சப் கலெக்டர் கிஷன் குமார், பழநி ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி,நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி பங்கேற்றனர்.