/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாஸ்மாக் பாரில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை: 2 பேர் கைது
/
டாஸ்மாக் பாரில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை: 2 பேர் கைது
டாஸ்மாக் பாரில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை: 2 பேர் கைது
டாஸ்மாக் பாரில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை: 2 பேர் கைது
ADDED : நவ 04, 2025 01:55 AM

வடமதுரை:  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடி டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாமரைப்பாடி ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி முருகன் 45. கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்த முருகன் 15 ஆண்டுகளாக தாமரைப்பாடி தந்தை வீட்டில்  வசித்தார். மனைவி வெண்ணிலா, 2 மகன்கள் திருச்சி மாவட்டம் கல்லாங்காடு பகுதியில் வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு  தாமரைப்பாடி டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்ற முருகனுக்கும் டி.என்.பாறைப்பட்டி பிரேம்குமாருக்கும்  தகராறு ஏற்பட்டது. இதில் பிரேம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து கல்லால் தாக்கினார். இதில்  முருகன்   இறந்தார்.
கல்லாத்துப்பட்டி கிருஸ்ட் ஆண்ரூஸ் 26,  கரண் ஜேம்ஸ்ராஜை 25, கைது செய்த  வடமதுரை போலீசார் பிரேம்குமார், தாமரைப்பாடி காளிராஜை  தேடுகின்றனர்.