/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புத்தாண்டில் பிறந்த 20 முத்துக்கள்
/
புத்தாண்டில் பிறந்த 20 முத்துக்கள்
ADDED : ஜன 02, 2026 05:55 AM
திண்டுக்கல்: ஆங்கில புத்தாண்டையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சி யடைந்தனர்.
பிறந்த தேதிகள் விசேஷ தினங்களாக அமைவது பெற்றோர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும். விசேஷ தினங்களில் குழந்தைகள் பிறப்பதை பெற்றோர் பெரியோர் கூடுதல் அதிர்ஷ்டமாக பார்க்கின்றனர். இதற்காக நாள், நட்சத்திரம் பார்த்துக்கூட அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதும் நடக்கிறது.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு, காதலர் தினம், உழைப்பாளர் தினம் போன்ற குறிப்பிடத்தகுந்த நாட்களில் பிறக்கும் குழந்தைகள் கடின உழைப்பாளிகளாகவும், புது நம்பிக்கை அளிப்பவர்களாகவும், அன்பு, பல்திறன் படைத்தவர்களாகவும் வருவர் என நம்புகின்றனர். குழந்தை பிறப்பது மகிழ்ச்சியான செய்தி என்றால் விசேஷ நாட்களில் குழந்தை பிறப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப் படுகிறது.
அந்தவகையில் ஆங்கில புத்தாண்டான நேற்று (ஜன.1) காலை முதல் மாலை 5:00 மணி வரை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 6 ஆண், 14 பெண் என 20 குழந்தைகள் பிறந்தன. ஆங்கில புத்தாண்டையொட்டி குழந்தை பிறந்ததால் அந்தந்த குடும்பத்தினர் கூடுதல் அதிர்ஷ்டமாக கருதி மகிழ்ச்சி அடைந்தனர்.

