தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தேர்வில் சலுகை கோரி மாற்றுத்திறன் மாணவர்கள் 200 பேர் விண்ணப்பம்

தேர்வில் சலுகை கோரி மாற்றுத்திறன் மாணவர்கள் 200 பேர் விண்ணப்பம்

தேர்வில் சலுகை கோரி மாற்றுத்திறன் மாணவர்கள் 200 பேர் விண்ணப்பம்


ADDED : செப் 25, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், செப்.26

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அரசு தேர்வுகளை எழுத அவர்களது திறனின் அடிப்படையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில் இதற்கான விண்ணப்பங்கள் பெற செப்.,25 இறுதிநாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று வரை 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. 

இந்த விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), மாவட்ட தேர்வுகள் துறை உதவி இயக்குநர்  தலைமையிலான ஆய்வுக்குழுவினர் அக்.,7 முதல் அக்.,16 வரை ஆய்வு செய்ய உள்ளனர்.

அதன்பின் நவ.,5க்குள் விண்ணப்பத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு மீண்டும் நவ.,6 முதல் நவ.,13 வரை குழு ஆய்வு செய்யப்படும். நவ.,20ல் ஆய்வுக்கு பின் இறுதி செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளன என மாவட்ட அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us