/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு ஊழியர்கள் மறியல் 230 பேர் கைது
/
அரசு ஊழியர்கள் மறியல் 230 பேர் கைது
ADDED : பிப் 11, 2026 06:25 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 230 பேர் கைது செய்யப்பட்டனர்.
வருவாய், பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், பணி பளுவை கருத்தில் கொண்டு ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் பாஸ்டின், ராஜரத்தினம், நாகலட்சுமி, கண்ணன் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் முபாரக் அலி, செயலாளர் சுகந்தி கலந்துகொண்டு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் பிப்.19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக பேசினர். தொடர்ந்து ஊர்வலமாக வந்த அரசு ஊழியர்கள் எம்.ஜி.ஆர்., சிலை அருகே ரோடு மறியல் செய்தனர். அரசு ஊழியர்கள் 230 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

