ADDED : மார் 15, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய 240 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
உடனே அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதுமட்டுமின்றி அதே பகுதியில் மளிகை கடை ஒன்றில் பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்காக கூடுதல் வர்ணம் பூசிய கலர் அப்பளம் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டது.

