/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 277 பேர் முறையீடு
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 277 பேர் முறையீடு
ADDED : அக் 07, 2025 04:29 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 277 பேர் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்டகோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, துணை கலெக்டர் (பயிற்சி) ராஜேஸ்வரிசுவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரப்பினர் நல அலுவலர் சுகுமார் உட்படபலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல், நல்லமநாயக்கன்பட்டியை அடுத்த ரெங்கசத்திரப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் அளித்த மனுவில், காஸ் தனியார் ஏஜென்சியில் சிலிண்டருக்கு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூலிப்பது தொடர்கிறது. மறுத்தால் விநியோகிப்பதில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.