தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 3 அரசு பஸ்கள் ஜப்தி

3 அரசு பஸ்கள் ஜப்தி

3 அரசு பஸ்கள் ஜப்தி


UPDATED : ஜூலை 14, 2026 07:07 PM

ADDED : ஜூலை 14, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 07:07 PM ADDED : ஜூலை 14, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:பழநி போடுவார்பட்டியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் செல்வராஜ் 35. இவர் 2022 பிப்.,2ல் டூவீலரில் ஆயக்குடி அருகே சென்றபோது அரசு பஸ் மோதிய விபத்தில் இறந்தார்.

இழப்பீடு கேட்டு அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.43 லட்சத்து 83 ஆயிரத்து 160 வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. அதனை வழங்காததால் பழநி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர்.

விசாரித்த நீதிபதி மலர்விழி வட்டியுடன் இழப்பீட்டு தொகையாக ரூ.55 லட்சத்து 84 ஆயிரத்து 428 வழங்க உத்தரவிட்டார். அதனையும் போக்குவரத்து கழகம் வழங்காததால் நீதிபதி உத்தரவின்படி நீதிமன்ற ஊழியர்கள் பழநி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த மூன்று அரசு பஸ்களை ஜப்தி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us