ADDED : மார் 14, 2024 04:28 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்த கார் ஒன்று வேடசந்துார் நாகம்பட்டி நெடுஞ்சாலை அருகே நின்று கொண்டிருந்தது. நெடுஞ்சாலை ரோந்து வாகனம் வர 3 பேர் தப்பி ஓடினர்.
போலீசார் காரை சோதனை செய்தபோது 325 கிலோ எடை குட்கா புகையிலை பொருட்கள் இருக்க போலீசார் காரை வேடசந்துார் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். எஸ்.ஐ., பாண்டியன் தலைமையிலான போலீசார்
பெங்களூர் சென்று குட்கா கடத்திய பேருலால் 25, நாராயணன் லால் 26, ரோனாத் சிங் 20, ஆகிய மூன்றுபேரை கைது செய்தனர்.
