ADDED : மார் 07, 2026 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: கூம்பூர் ஊராட்சி சின்ன வெள்ளாளப்பட்டியில் குத்தகை தோட்டம் போட்டு வருபவர் சரவணன் 55. இவர் தனது 20 செம்மறி ஆடுகளை தோட்டத்துப்பட்டியில் அடைத்து இருந்தார்.
இப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறின. 7 ஆடுகள் காயம் அடைந்த நிலையில் 3 ஆடுகள் இறந்து விட்டன.
இப்பகுதியில் உள்ள தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

