/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
30 பவுன் தங்க காசு ரூ.5.20 லட்சம் திருட்டு
/
30 பவுன் தங்க காசு ரூ.5.20 லட்சம் திருட்டு
ADDED : மார் 15, 2024 02:02 AM
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு டாக்டர் வீட்டில் 30 பவுன் தங்க காசு,ரூ 5.20 லட்சம் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒட்டன்சத்திரம் மூனுரைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணவேணி 34. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை கிருஷ்ணவேணி திண்டுக்கல் சென்றார். இவரது பெற்றோர் நீலமலைக்கோட்டைக்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றனர். இரவு பெற்றோர் திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் தங்க காசு, ரூ.5.20 லட்சம் மர்மநபர்களால் திருடப்பட்டது தெரிந்தது. டி.எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ், அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

