தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு ஆக.31க்குள் முன்பதிவு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு ஆக.31க்குள் முன்பதிவு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு ஆக.31க்குள் முன்பதிவு


UPDATED : ஆக 11, 2026 10:00 PM

ADDED : ஆக 11, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 10:00 PM ADDED : ஆக 11, 2026 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளம் முகவரி வழியாக ஆக.,31க்குள் முன்பதிவு செய்யலாம் என கலெக்டர் துர்கா தெரிவித்து உள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மாநில அளவில் 2026 செப்டம்பரில் நடக்க உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என வெவ்வேறு பிரிவுகளில் 45 விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 6 முதல் பிளஸ் 2 முடித்தவர்கள் முன்பதிவு செய்யலாம். 25 வயதிற்கு உட்பட்ட கல்லுாரி மாணவ, மாணவிகள் பிரிவில் 2001 ஜூலை 1 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்தவராக இருப்பது அவசியம். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஆண் பெண் வயது வரம்பு இன்றி முன்பதிவு செய்து பங்கேற்கலாம். பொதுப்பிரிவினர் 15 வயது முதல் 35 வயது வரை ஆண்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் பிரிவில் பணிபுரியும் மாவட்டத்தை சார்ந்த நிரந்தர அரசு பணியாளர்கள் மட்டுமே முன்பதிவு செய்து பங்கேற்க வேண்டும்.

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள https://tncmtrophy.sdat.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். இறுதி நாள் ஆக.,31 மாலை 6:00 மணி. ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க இயலும். போட்டிகளில் பங்கேற்க வரும்போது அதற்கான ஆவணங்களை மாவட்ட விளையாட்டு அலுவலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியிலும், 74017 03504 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்கள் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us