/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இந்தியர்களில் 31.5 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு விழிப்புணர்வு மாநாட்டில் தகவல்

ADDED : டிச 15, 2025 05:56 AM

திண்டுக்கல்: இந்தியர்களில் 31.5 கோடி பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக திண்டுக்கல்லில் நடந்த விழிப்புணர்வு மாநாட்டில் உலக உயர் ரத்த அழுத்த கழகத்தின் துணை தலைவர் டாக்டர் நரசிங்கன் பேசினார்.
இந்திய உயர் ரத்த அழுத்த சங்கம் சார்பில் உயர் ரத்த அழுத்தத்தை பற்றிய விழிப்புணர்வு, கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடந்தது. தமிழ்நாடு கிளைத்தலைவர் கண்ணன், துணைத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தனர்.
உலக ரத்த அழுத்த கழகத்தின் துணைத் தலைவர் நரசிங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், 'நாளுக்கு நாள் ரத்த அழுத்தத்தின் பரவல் அதிகமாகி கொண்டிருந்தாலும் நோயாளிகளுக்கு அதன் அறிகுறிகள் எதுவும் அதிகமாக தெரியாததால் அதுபற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாக உள்ளது. தற்போதைய தரவுகளின் படி இந்தியர்களில் 31.5 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சில எளிய வாழ்க்கை முறை மாறுதல்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் உருவாவதையும், பாதிப்பையும், இறப்பையும் தவிர்க்க முடியும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் தக்க பரிசோதனைகள் செய்து தொடர்ந்து உடல் நிலையை கண்காணிப்பதன் மூலம் பாதிப்பை குறைக்க முடியும்' என்றார்.
செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மதிசெல்வன், சேகர், முரளிதரன் செய்திருந்தனர்.