தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இறந்த 38 பன்றிகள் குளத்தில் வீச்சு

இறந்த 38 பன்றிகள் குளத்தில் வீச்சு

இறந்த 38 பன்றிகள் குளத்தில் வீச்சு


UPDATED : செப் 23, 2026 06:54 PM

ADDED : செப் 23, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 06:54 PM ADDED : செப் 23, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்:வேடசந்துார் அருகே தம்மனம்பட்டி நான்கு வழிச்சாலையில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் உடல்நிலை பாதித்து இறந்த 38 வெள்ளை பன்றிகளை வாகனத்தில் ஏற்றி வந்த நபர்கள், கரூர் திண்டுக்கல் ரோட்டில் பாலத்தின் மீது நின்றவாறு வீசி சென்றுள்ளனர். வேடசந்துார் பி.டி.ஓ., கற்பகம், கால்நடைத்துறை மண்டல இயக்குனர் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலர் கணேசன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மழைக்காலம் என்பதால் பன்றிகளை குளத்திற்குள் புதைக்க வேண்டாம் என முடிவு செய்தனர். அவற்றை டிராக்டரில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள அரசு நிலத்தில் புதைத்தனர். பன்றிகளை வீசி சென்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us