ADDED : ஆக 24, 2026 05:01 PM
வடமதுரை, ஆக.25-
வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரூ.10.33 கோடியில் நீடிக்கப்படும் 3வது பாதை பணிகள் மும்முரமாக நடக்கிறது.
திண்டுக்கல் விழுப்புரம் இருவழி ரயில் பாதை திட்டத்தில் இறுதியாக சேர்ந்ததால் வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் குறைந்த துார துணை பாதை, ஜல்லி டெப்போவுக்கு ஒரு பிட் லைன் மட்டும் கூடுதலாக அமைத்து அவசர கதியில் பணி நிறைவடைந்தது. எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழிவிடும் வகையில் குறைந்த வேக சரக்கு, பாசஞ்சர் ரயில்களை 3வது பாதையில் நிறுத்தி வைத்து பின்னர் அனுப்பும் அளவிற்கு நீளமில்லை. இந்த பணி அய்யலுார் அல்லது தாமரைப்பாடியில் மட்டும் செய்ய முடிந்தது.
இப்பணிக்கு வடமதுரை ஸ்டேஷனையும் பயன்படுத்த இங்குள்ள 3வது பாதையை மின்மயமாக்கலுடன் நீட்டிப்பு செய்ய ரூ.10.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக நடக்கிறது. தற்போது தண்டவாள பாதை அமைக்கப்பட்டு ஜல்லிக்கற்கள் நிரப்பும் பணி நடக்கிறது.
