ADDED : டிச 28, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம் : ஸ்ரீராமபுரம் அருகே கட்டச்சின்னாம்பட்டி கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது வீட்டில் மான் கொம்புகள் இருப்பதாக கிடைத்த தகவல்படி வனத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அங்கு கடமானின் தலையுடன் கூடிய கொம்புகளை சிலர் விற்பனை செய்ததை கண்டனர். திருப்பூர் மாவட்டம் அனுப்பார் பாளையத்தை சேர்ந்த உமாசங்கர், லட்சுமி நகரை சேர்ந்த சுதன்குமார், பழநி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராமக்கண்ணன், கோட்டைப்பட்டி தண்டபாணி ஆகியோரை கைது செய்தனர்.-

