ADDED : மார் 18, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் சிறுமலை பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மதுபாட்டில்களை கடத்தியது தெரிந்தது. ஆட்டோவில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தில் அவர்கள் தோட்டனுாத்து மேட்டூர் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி 49, பிரபாகரன் 28 என்பது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

