தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 486 மதுபாட்டில்கள்,பரிசு பொருட்கள் பறிமுதல்

 486 மதுபாட்டில்கள்,பரிசு பொருட்கள் பறிமுதல்

 486 மதுபாட்டில்கள்,பரிசு பொருட்கள் பறிமுதல்


ADDED : ஏப் 04, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு சென்ற 486 மதுபாட்டில், பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தொகுதி தேர்தல் அலுவலர், உதவி அலுவலர் கண்காணிப்பில் முக்கிய சந்திப்புகள், மாவட்ட எல்லைகள், சர்ச்சைக்குரிய பகுதிகளில் பறக்கும் படையினர் ரோந்து வருகின்றனர். கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகாரின் பேரில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், மதுபாட்டில்கள் வழங்கப்படுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நிலக்கோட்டையில் 109, பழநி 137, நத்தம் 240 என 486 மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நிலக்கேட்டையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற குக்கர், பூரிக்கட்டை, நான் ஸ்டிக் தவா, ஹாட்பாக்ஸ் என ரூ.94 ஆயிரத்து 990 மதிப்பு பொருட்களை பறிமுதல் செய்த நிலையில் ஆவணங்களை ஒப்படைக்க இதன் பொருட்கள் விடுவிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us