UPDATED : அக் 13, 2026 01:17 AM
ADDED : அக் 13, 2026 01:14 AM
வேடசந்தூர்: வேடசந்துார் அருகே ஆட்டோ, வேன் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.
மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சொகுசு காரை நாராயணன் லால் 25, ஓட்டிச்சென்றார். கருக்காம்பட்டி மேம்பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்ற ஆட்டோ மீது மோதியது.
ஆட்டோ பள்ளத்தில் இறங்கி நின்றதில் டிரைவர் முத்துராஜா 44, காயமடைந்தார்.
தொடர்ந்து சென்டர் மீடியனை கடந்து சென்ற கார் கரூர் திண்டுக்கல் ரோட்டில் வந்த மினிவேன் மீது மோதியது. வேன் டிரைவர் கருப்புசாமி 35, உடன் வந்த கணபதி 35, பாலமுருகன் 34, காயமடைந்தனர். காரை ஓட்டிய நாராயணன் லாலும் காயமடைந்தார்.
நொறுங்கிய காரை போலீசார் சோதனை செய்தபோது ரூ.5 லட்சத்து 49 ஆயிரம் பணம் இருந்தது தெரிந்தது.
3 வாகனங்களும் சேதமடைந்த நிலையில், காயம் அடைந்த 5 பேரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, தாசில்தார் ராஜேந்திரன் காரில் இருந்த பணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
