/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தவசிமடையில் ஜல்லிக்கட்டு காளை முட்டி 59 பேர் காயம்
/
தவசிமடையில் ஜல்லிக்கட்டு காளை முட்டி 59 பேர் காயம்
தவசிமடையில் ஜல்லிக்கட்டு காளை முட்டி 59 பேர் காயம்
தவசிமடையில் ஜல்லிக்கட்டு காளை முட்டி 59 பேர் காயம்
ADDED : பிப் 17, 2025 05:36 AM

நத்தம், : நத்தம் தவசிமடையில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி 59 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. கால்நடைகளை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் தலைமையில் கால்நடை மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர்கள் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்கள் 316 பேரை பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதித்தனர். ஆர்.டி.ஓ.,சக்திவேல் தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.
பிடிபடாத மாடுகள், காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, குக்கா, ஆட்டுக்குட்டி, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
லிங்கவாடியை சேர்ந்த பொன்னன், தவசி மடையைச் சேர்ந்த பாதுகாப்பு குழு விக்டர் (28),மதுரையைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் ஆனந்த் உள்பட 59 பேர் காயமடைந்தனர்.

