ADDED : ஏப் 11, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி திண்டுக்கல் ரோட்டில் கல்லுாரிகள் செயல்படும் பகுதியில் டவுன் போலீசார் ரோந்து சென்றனர்.
அங்கு நின்றிந்த பழநி அடிவாரம் சுகுமார் 21, நாகராஜ் 24, புளியம்பட்டி அம்சவர்தன் 23, சரவணன் 25, சத்யா நகர் தினேஷ்குமார் 21, மதினா நகர் அப்துல் ஜாபர் 22, ஆகியோர் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார் 120 கிராம் கஞ்சா, 3 டூவீலர், 6 அலைபேசிகளை பறிமுதல் செய்தனர்.
