ADDED : செப் 23, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: தாமரைப்பாடி கல்லாத்துபட்டி மனோவா 36, அம்மையநாயக்கனுார் அனிதாமேரி தம்பதி இடையே கருத்து வேறுபாடால் விவாகரத்து வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடக்கிறது.
வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதில் காயமடைந்த மனோவா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இருதரப்பு புகாரில் அனிதாமேரி, அவரது குடும்பத்தினர் சார்லஸ், இருதயமேரி, அருண் மைக்கேல்ராஜ் மீதும், மறு தரப்பில் மனோவா, ஜெனிபர் மீதும் வழக்கு பதிந்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
