ADDED : மார் 04, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் டூவீலர்களில் செல்பவர்கள் சாலை விதிகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் நகர் வடக்கு போலீஸ் எஸ்.ஐ., சூரியகலா தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது அதிவேகமாக டூவீலர் ஓட்டியவர்கள், சாலை விதிகளை மீறும் வகையில் வந்தவர்கள், கல்லுாரி மாணவர்கள் என 60க்கும் மேற்பட்ட டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பினர்.
