ADDED : பிப் 23, 2024 06:02 AM

வடமதுரை: அய்யலுாரில் இருந்து ஒரே குழுவாக 6000 பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
அய்யலுார், வடமதுரை சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது 35ம் ஆண்டாக அய்யலூர் பகுதியை சேர்ந்த 5000 பேர் காப்பு கட்டி விரதமிருக்க துவங்கினர். இவர்கள் நேற்று அய்யலுார் களர்பட்டி ஆதிபராசக்தி கோயில் வளாக சமயபுரம் மாரியம்மன் கோயிலிருந்து குருசாமி பிச்சை தலைமையில் சிறப்பு வழிபாடு செய்தனர் .அங்கிருந்தப்படி அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்தபடி சமயபுரம் சென்றனர்.
இவர்களுக்கு உதவியாக 1000 பேர் என 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்கள் பிப்.25 ல் சமயபுரத்தில் தரிசனம் செய்து ஊர் திரும்புகின்றனர்.
