ADDED : பிப் 22, 2026 07:17 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தென் மண்டலத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் 61 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், எரியோடு இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், மாவட்டக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அன்னமயில், நத்தம் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் மதுரைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
