ADDED : நவ 23, 2026 06:18 AM
அம்பிளிக்கை: திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை அருகே கஞ்சா கடத்திய 9 பேரை கைது செய்த போலீசார், 7 கிலோ கஞ்சா, ரூ. 2 லட்சம் ரொக்கம், நான்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அம்பிளிக்கை சின்னையகவுண்டன்வலசில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் பெயரில் போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். எல்லைபாறை குளம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 9 பேர் போலீசாரை கண்டவுடன் தப்பியோட முயன்றனர்.
போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திப்பம்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு 21, செம்பட்டி ஜெ.புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் 29, சிக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்வகணபதி 28, விஜயன் 24, கள்ளிமந்தையத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் 29, கேதையுறும்பை சேர்ந்த தனுஷ் 21, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்பால் 32, ஒடிசாவைச் சேர்ந்த ஜித்தேந்தர் தண்டல் 22, லிப்போன் கிருத்திக் 22, என்பது தெரிந்தது.
9 பேரும் கஞ்சா கடத்தியதை அறிந்த போலீசார், அனைவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா, ரூ. 2 லட்சம் ரொக்கம், இரு டூவீலர்கள், இரு கார்களை பறிமுதல் செய்தனர்.
