/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிமென்ட் ஆலை குடியிருப்பில் 70 சவரன், ரூ.1 லட்சம் திருட்டு
/
சிமென்ட் ஆலை குடியிருப்பில் 70 சவரன், ரூ.1 லட்சம் திருட்டு
சிமென்ட் ஆலை குடியிருப்பில் 70 சவரன், ரூ.1 லட்சம் திருட்டு
சிமென்ட் ஆலை குடியிருப்பில் 70 சவரன், ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : ஜன 12, 2025 12:09 AM
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பில், கார்த்திகேயன், வேல்முருகன், தாமரைக்கண்ணன், பழனிசாமி, கருப்பையா, கவியரசன் ஆகியோரது வீடுகள் நேற்று முன்தினம் பூட்டப்பட்டிருந்தன.
இந்த வீடுகளை குறிவைத்த கொள்ளையர்கள், பூட்டை உடைத்து வீடுகளுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 70 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய், வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
டி.எஸ்.பி., பவித்ரா மற்றும் போலீசார் விசாரித்தனர். இதே குடியிருப்பில் 2023 பிப்., 22ல் பூட்டியிருந்த நான்கு வீடுகளில், 170 சவரன் நகை, 80,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
இதில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அக்கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் தற்போதும் கைவரிசை காட்டியிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.