/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
77 சவரன் கொள்ளையடித்த ம.பி., நபருக்கு 'மாவுக்கட்டு'
/
77 சவரன் கொள்ளையடித்த ம.பி., நபருக்கு 'மாவுக்கட்டு'
77 சவரன் கொள்ளையடித்த ம.பி., நபருக்கு 'மாவுக்கட்டு'
77 சவரன் கொள்ளையடித்த ம.பி., நபருக்கு 'மாவுக்கட்டு'
ADDED : பிப் 10, 2025 12:17 AM

குஜிலியம்பாறை; சிமென்ட் ஆலை குடியிருப்பில், 77 சவரன் நகை கொள்ளை வழக்கில் கைதானவர், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கால் முறிந்தது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை கரிக்காலி சிமென்ட் ஆலை நிரந்தர பணியாளர்கள் குடியிருப்பில், ஜன., 9 இரவு, கார்த்திகேயன், வேல்முருகன், கருப்பையா, தாமரைக்கண்ணன், பழனிசாமி, கவியரசன் ஆகியோர் வீடுகளில் புகுந்த கொள்ளையர், 77 சவரன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளி, 1.30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர்.
மூன்று தனிப்படைகள், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இதில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது. மத்திய பிரதேசம் சென்று, வழக்கின் முக்கிய நபரான, தார் மாவட்டம், தண்டா கிராமத்தைச் சேர்ந்த கலாம், 24, என்ற வாலிபரை தனிப்படையினர் தேடினர். அவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பதுங்கி இருப்பது தெரிந்தது.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்ற கலாமை போலீசார் கைது செய்து, 12 சவரன் நகையை மீட்டனர். குஜிலியம்பாறை ஸ்டேஷன் அழைத்து வந்தபோது, கலாம் தப்பியோட முயன்றார்; அப்போது கீழே விழுந்ததில், அவரது இடது கால் முறிந்தது. திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில், மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.

