/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு அபராதம்
/
காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு அபராதம்
காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு அபராதம்
காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு அபராதம்
ADDED : ஜூலை 22, 2025 04:06 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தாலுகா மாட்டுபாதைபிரிவு ராமபட்டிணம்புதுார் செல்லும் ரோட்டில் வன அலுவலர் ராஜா தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அங்குள்ள பட்டா நிலங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி 61, கார்த்திக் 34, துர்க்கை வேந்தன் 33, ஐயப்பன் 34, அபினேஷ் 24, மகுடீஸ்வரன் 35, வீரபாண்டி 25, குமரேசன் 37, ஆகியோருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வன விலங்குகளை வேட்டையாட செல்லும் நபர்கள் மீது வன உயிரியல் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என வன அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.