/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் காவலர் எழுத்துத்தேர்வு: 883 பேர் ஆப்சென்ட்
/
மாவட்டத்தில் காவலர் எழுத்துத்தேர்வு: 883 பேர் ஆப்சென்ட்
மாவட்டத்தில் காவலர் எழுத்துத்தேர்வு: 883 பேர் ஆப்சென்ட்
மாவட்டத்தில் காவலர் எழுத்துத்தேர்வு: 883 பேர் ஆப்சென்ட்
ADDED : நவ 10, 2025 01:05 AM

திண்டுக்கல்: தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான முதற்கட்ட எழுத்துத்தேர்வை 883 பேர் எழுதவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வுகள், தமிழக குடிமைபொருள் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி., பிரதீப் தலைமையில் நத்தம் என்.பி.ஆர்., எஸ்.எஸ்.எம்., பி.எஸ்.என்.ஏ., மற்றும் ஜி.டி.என்., கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் நடந்தது. 5 ஆயிரத்து 826 ஆண், ஆயிரத்து 650 பெண் என மொத்தம் 7ஆயிரத்து 476 பேர் எழுத்துத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் 6 ஆயிரத்து 593 பேர் கலந்துக்கொண்டனர். 883 பேர் எழுதவில்லை. தேர்விற்காக மொத்தம் 693 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.