sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தி.மு.க., பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியாக தம்பதி கொலை 9 பேரிடம் விசாரணை

/

 தி.மு.க., பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியாக தம்பதி கொலை 9 பேரிடம் விசாரணை

 தி.மு.க., பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியாக தம்பதி கொலை 9 பேரிடம் விசாரணை

 தி.மு.க., பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியாக தம்பதி கொலை 9 பேரிடம் விசாரணை


ADDED : ஜன 10, 2026 04:56 AM

Google News

ADDED : ஜன 10, 2026 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 2024ல் தி.மு.க., பிரமுகரை வெட்டி கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஏசுராஜ் 41, மனைவி தீபிகா 37 நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுப்படி 9 பேரிடம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் அடுத்த வேடபட்டி தி.மு.க., பிரமுகர் மாயாண்டி ஜோசப் 60. ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இவரது மனைவி நிர்மலா 54. முன்னாள் அடியனுாத்து ஊராட்சித் தலைவராக இருந்தார். உடல்நிலை சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மாயாண்டி ஜோசப் யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். 3 மகள்களும் வெளியூரில் உள்ள நிலையில் மாயாண்டி ஜோசப் மட்டும் தனியாக வேடப்பட்டியில் வசித்தார். 2024 மே 22 இரவு 8:30 மணிக்கு டூவீலரில் வந்த மாயாண்டி ஜோசப்பை 4 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது.யாகப்பன்பட்டியில் உள்ள சர்ச் நிர்வாகம் தொடர்பாக மாயாண்டி ஜோசப்பிற்கும் அதே ஊரை சேர்ந்த ஏசுராஜ் தரப்பிற்கும் மோதல் இருந்ததும் அதன் காரணமாக கொலை நடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஏசுசுராஜ் 41, கென்னடி 37, டேனியல் ராஜா 20, ஸ்டாலின் 20, அலெக்ஸ் பிரிட்டோ 20, இந்திரா காலனியை சேர்ந்த காளீஸ்வரன் 19, பிரவீன்குமார் 19, 2 சிறார்கள் என 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

சிறுவர்களை தவிர்த்து ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி 2025 ஜூன் 3ல் நீதிபதி முத்துசாரதா தீர்ப்பளித்தார். ஏழு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏசுராஜின் 2வது மனைவி தீபிகா கணவரை நிபந்தனை ஜாமினில் வெளியே எடுத்தார். இதில் மாயாண்டி ஜோசப் தரப்பினர் ஆத்திரமடைந்தனர். இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி திண்டுக்கல் நத்தம் ரோடு ஆர்.எம்.டி.சி., நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சென்ற ஏசுராஜை வெட்டி கொலை செய்துவிட்டு யாகப்பன்பட்டியில் வீட்டில் இருந்த தீபிகாவை அடுத்து கொலை செய்தனர்.

தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அருள்ராஜ் 58, ஞானராஜ் 54, தர்மராஜ் 50, அந்தோணி 52, ஆரோக்கியசாமி 35, ஜான்பீட்டர் 42, சேவியர் ஆல்பர்ட் 22, மைக்கேல்ராஜ் 31, உட்பட 9 பேரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us