/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
9083 பயனாளிகள் பயன் அமைச்சர் சக்கரபாணி தகவல்
/
9083 பயனாளிகள் பயன் அமைச்சர் சக்கரபாணி தகவல்
ADDED : ஆக 14, 2025 02:41 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தொகுதியில் முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 9083 பயனாளிகள் பயன்பெற உள்ளதாக,'' உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
வயது முதிர்ந்தோர்,மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டு தாரர்களுக்கு அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை' ஒட்டன்சத்திரம் தொகுதியில் சிந்தலவாடம்பட்டி, புஷ்பத்தூர் ஊராட்சி வயலுார், கூத்தம்பூண்டி ஊராட்சி மோதுபட்டி, கொ.கீரனுாரில் அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்து பேசியதாவது:
ரேஷன் கடைகளில் மாதந்தோறும் விநியோகம் செய்யப்படும் குடிமைப் பொருட்கள் இனி மாதத்தின் இரண்டாவது வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வயதானோர். மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு கொண்டு சென்று வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 9083 பயனாளிகள் பயன்பெற உள்ளனர் என்றார்.
ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், பொன்ராஜ், சுப்பிரமணி, தங்கம் கலந்து கொண்டனர்.