ADDED : ஏப் 29, 2026 03:33 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல் நகர்- நத்தம் மேம்பாலம் கீழே ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சர்வீஸ் ரோடு உள்ளது.
இந்த ரோட்டில் நேற்று கார் ஒன்று தாறுமாறாக ஓடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் மீது மோதியது.
இதனால் கீழே சரிந்த டூவீலர்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. அவ்வழியே டூவீலரில் வந்த பாரதி நகரை சேர்ந்த கோகிலா கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காரில் வந்தவர்களை பொதுமக்கள் பிடித்து நகர் வடக்கு போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
