/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
13 ஆண்டாகியும் அதிகாரி இல்லாத பத்திர அலுவலகம்
/
13 ஆண்டாகியும் அதிகாரி இல்லாத பத்திர அலுவலகம்
ADDED : ஜன 12, 2025 05:06 AM
வடமதுரை : வடமதுரை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு 13 ஆண்டுகளாக நிரந்தர சார்பதிவாளர் பணியில் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அளவிலானவர்களே மாற்று பணியாக வருகின்றனர்.
இதனால் மேனுவல் வில்லங்க சான்று வழங்க மனு வாங்க மறுப்பது, இன்டெக்ஸ் திருத்தம் சரி செய்யாதது, நில மதிப்பு நிர்ணயம் செய்ய அதிக காலதாமதம் செய்வது, பணியாளர்கள் தாமதமாக பணிக்கு வருவது என பல பிரச்னைகளுக்கு இங்கு தீர்வு கிடைக்காமல் நீடிக்கிறது. பலமுறை உயரதிகாரிகளுக்கு மனுக்கள் பல தந்தும் தீர்வு இல்லாததால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வடமதுரையில் போஸ்டர்கள் மூலம் தங்கள் சிரமத்தை வெளிப்படுத்துகின்றனர். நிரந்தரமான சார்பதிவாளர் பணியில் இல்லாததால் சிக்கல் மிகுந்த விஷயங்களில் சரியான முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் விடப்படுவதாலும், பத்திரப்பதிவு முடியாததால் அதனை சார்ந்தவர்கள் மாதக்கணக்கில் அலையும் நிலையும் உள்ளது. இங்கு நிரந்தர சார்பதிவாளர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

