/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பின்றி பாழாகும் நறுமண சுற்றுலா விடுதி
/
பராமரிப்பின்றி பாழாகும் நறுமண சுற்றுலா விடுதி
ADDED : நவ 21, 2025 05:23 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே உள்ள தடியன்குடிசை நறுமண சுற்றுலா தங்கும் விடுதி பராமரிப்பற்று புதர்மண்டி உள்ளது.
மத்திய அரசு, ஐ.நா சபை இணைந்து 2009ல் தடியன்குடிசையை கிராமிய நறுமண சுற்றுலா தலமாக அறிவித்தது. முதற்கட்டமாக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.70 லட்சம் நிதி வழங்கியது.
சுற்றுலாவை மேம்படுத்தும் பயிற்சிக்காக ரூ.20 லட்சம், தங்கும் விடுதி, கேண்டீன், விற்பனைக் கூடம், உயர் கோபுரம் உள்ளிட்டவற்றிற்கு ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டது. காமனுார் ஊராட்சி பட்லங்காடு தேனீ வளர்ப்பு பயிற்சி மையம் தேர்வு செய்யப்பட்டு தங்கும் விடுதி, தகவல் மையம், விற்பனைக்கூடம் கட்டமைக்கப்பட்டு சுற்றுலா விடுதி செயல்பட துவங்கியது.
பராமரிப்பு, நிர்வாகத்தை கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேற்கொண்டது.
சில மாதங்கள் செயல்பட்ட விடுதி முறையாக பராமரிக்காதது, விடுதி குறித்த அறிவிப்பு பலகை அமைக்காதது, இணையதளத்தில் விடுதி முன்பதிவு, தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தாத போக்கால் பிரபலமாகாது இருந்தது.
மேலும் தங்கும் விடுதியில் நவீன வசதிகள் ஏற்படுத்தாமல் முறைகேடுகளால் விடுதி செயல்பாடு முடங்கியது.
விடுதி முழுதும் பராமரிப்பின்றி புதர்மண்டி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர், உள்கட்டமைப்பு சேதமடைந்து பொழி விழந்துள்ளது.
பி.டி.ஓ., சுவாமிநாதன் கூறுகையில், ''விடுதியை பராமரிக்க போதுமான நிதியில்லை. பாதுகாவலருக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது,'' என்றார்.
தடியன்குடிசை நறுமண சுற்றுலா விடுதியை புனரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

